இந்த ஆண்டின் கடைசி சூரியன் உதயம்… குமரியில் காணக் குவிந்த ஐயப்ப பக்தர்கள்.. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!

Author: Babu Lakshmanan
31 December 2022, 11:26 am
Quick Share

சர்வேதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் 2022 ஆண்டின் கடைசி சூரியன் உதயத்தை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் முக்கியமான கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில், அதிகாலை மற்றும் மாலையில் கடலில் சூரியன் உதயம் மற்றும் மறையும் இயற்கை நிகழ்வை கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கம்.

அதேபோல, கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சவாரி மூலமாக சென்று காண்பதற்காகவும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரி சுற்றுலா தலத்திற்கு வருகை தருவார்கள்.

அந்த வகையில், 2022ம் ஆண்டின் கடைசி சூரியன் உதயமாகும் காட்சியை காண்பதற்காக இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குமரி கடற்கரை திருவேணி சங்கத்தில் குவிந்து தங்கள் மொபைலில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு மூலம் சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவதால் அங்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவதால் கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 711

0

0