தமிழகத்தில் முதன்முறையாக 27அடி ஆழத்தில் பாதாள லிங்கம் : விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு!!

26 November 2020, 3:12 pm
Pathala Lingam - Updatenews360
Quick Share

கோவை : சிறுமுகை அருகே தமிழகத்தில் முதன் முறையாக 27 அடி ஆழத்தில் பாதாள லிங்கம் நிறுவப்பட்டு அதற்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை கிச்சகத்தியூர் பகுதியில் ஸ்ரீ விருட்ச பீடம் சார்பில் 27 அடி ஆழத்தில் பாதாள லிங்கம் நிறுவப்பட்டு அதற்கு குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

நேற்று முதலே யாக சாலைகள் நிறுவப்பட்டு கணபதி ஓமத்துடன் நான்கு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று பவானி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து யாக சாலையில் சிறப்பு பூஜைகள் செய்து பாதாள லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

யாக வேள்வியில் வைக்கபட்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 27அடி ஆழத்தில் அமைக்கபட்ட பாதாள லிங்கத்திற்கு குடமுழுக்கு விழா நடத்தபட்டது

இதனையடுத்து 27 நட்சத்திர சித்தர் சிலைகளும் நிறுவப்பட்ட நிலையில் அதற்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பாதாள லிங்கத்தை வழிபட்டனர். தமிழகத்தில் நிறுவபட்டுள்ள முதல் பாதாள லிங்கம் இது என்பது குறிப்பிடதக்கது.

Views: - 1

0

0