கோவையில் 29.7 லட்சம் வாக்காளர்கள் : வரைவு பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர்

16 November 2020, 12:00 pm
Cbe Poll list- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தபணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், கோவையில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு இன்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண்கள் 14 லட்சத்து 68 ஆயிரத்து 722 பேர். பெண்கள் 15 லட்சத்து இரண்டாயிரத்து 142 பேர். மூன்றாம் பாலினத்தவர் 369 பேர். இதில் 15 ஆயிரத்து 165 பேர் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

24 ஆயிரத்து 727 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு முகவரி மாற்றம் மற்றும் ஒரே பெயர் மீண்டும் வருதல் உள்ளிட்ட காரணங்களால் நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நீக்கப்பட்டு அவர்களுக்கு பட்டியல் அதிகமாக இருப்பதற்குக் காரணம் தொடர் காரணம் இல்லை. ஏனென்றால் கோவையில் கொரோனா தொற்றால் 500-க்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் கலந்துகொண்டு முகவரி மாற்றம், புதிதாக பெயர் சேர்ப்பு உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம். அடுத்த ஒரு மாத காலம் இந்த பணிகள் நடைபெற உள்ளன கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி அன்று வரை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ள வேண்டும். விரைவில் முழுமையான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Views: - 15

0

0