அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. மாதா சிலைக்கு மாலை அணிவித்ததால் சர்ச்சை…!!

Author: Babu Lakshmanan
11 January 2024, 12:23 pm
Quick Share

சிறுபான்மையர் மக்களின் எதிர்ப்பையும் மீறி மாதா சிலைக்கு மாலை அணிவித்த காரணத்தால் பாஜக தலைவர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 8ம் தேதியன்று தருமபுரி மாவட்டத்தில் என் மண், எண் மக்கள் பாத் யாத்திரையில் கலந்துக்கொண்டு நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பி.பள்ளிப்பட்டி லூர்து அன்னை பேராலயத்தில் எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி மாதா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அண்ணாமலை சென்றார்.

அப்போது அருகேயிருந்த இளைஞர்கள், மணிப்பூர் சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி ஏன் மணிப்பூர் விவகாரத்தில் பாஜக தலையிடவில்லை என விவாதித்து, மாதா சிலைக்கு மாலை அணிவிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பின்பு அண்ணாமலை இடம் வாக்குவாதம் செய்த இளைஞர்களை அறிய இருந்த காவல்துறையினர் அப்புறப்படுத்திய பின்பு மாதா சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து சென்றார்.

இதனை அறிந்த அப்பகுதி சிறுபான்மையினர் மக்கள் அந்த மாலையை அப்புறப்படுத்தி தூக்கி வீசி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதாவது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது, பொது அமைதியை குலைக்க தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கிடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது என 153 (A)(a), 504, 505 (2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது பொம்மிடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்

Views: - 234

0

0