மோசடி காதல் மன்னன் காசியின் லேப்டாப்பில் 400 ஆபாச படங்கள், மொபைலில் 1900 நிர்வாணப் படங்கள் : நீதிமன்றம் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2022, 9:42 pm
Kasi Case - Updatenews360
Quick Share

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் 120க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் காதலிப்பதாக ஏமாற்றியதோடு, பணமோசடி, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி என்பவரை கடந்த 2020ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை, கந்துவட்டி வழக்கு என பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் ஆவணங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியனையும் போலீசார் கைது செய்தனர்.

அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, காசி லேப்டாப், மொபைலில் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்ததாகவும் மேலும் 400 ஆபாச வீடியோக்கள் லேப்டாப்பில் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சியளிக்கிறது.

காசியிடம் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக கூறியுள்ளனர்.120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர். இன்னும் பல சாட்சிகளை போலீஸ் விசாரிக்க வேண்டி உள்ளதால் காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்டது.

Views: - 519

0

0