மீண்டும் மீண்டும் குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாடும் FREE FIRE : செல்போன் தர மறுத்ததால் 6ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 ஏப்ரல் 2022, 2:37 மணி
6th Student Suicide-Updatenews360
Quick Share

கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் ப்ரிபயர் கேம் விளையாட அண்ணன் செல்போன் தர மறுத்ததால் 6ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு கண்ணப்பன் நகர் பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி. இவருக்கு கிட்டன் அம்மாள் என்ற மனைவியும், முத்துமாரி, வேப்பிலைக்காரி, ஏசம்மா என்ற மூன்று மகள்களும், ஈஸ்வரன்,(13) அர்ஜுனன்(12) என்ற 2 மகன்களும் உள்ளனர் .

பழனிசாமியின் கடைசி மகனான அர்ஜுனன் சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பள்ளியில் அண்ணன்
ஈஸ்வரனும் படித்துவருகிறான்.

நேற்று மாலை வழக்கம் போல் இருவரும் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்த ஈஸ்வரன், அர்ஜூனன் இருவரும் ப்ரிபயர் கேம் (free fire) விளையாட செல்போன் கேட்டு தகறாரில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து ஈஸ்வரன் செல்போன் தரமறுத்ததால் திடீரென வீட்டுக்குள் சென்று அர்ஜுனன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அர்ஜுனன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 1147

    0

    0