திருப்பூரில் இன்று ஒரே நாளில் 8 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா : அச்சத்தில் அரசுப் பள்ளிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 6:11 pm
Students Corona - Updatenews360
Quick Share

திருப்பூர் : இன்று ஒரேநாளில் ஒரு ஆசிரியர் உட்பட 8 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. சில பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள்.

அந்தவகையில் திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 300 க்கும் மேற்பட்டோர்க்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் வீரபாண்டி அரசு பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி, சேவூர் அரசு பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன், உடுமலை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன், புங்கமுத்தூர் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவன், மடத்துக்குளம் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன், குன்னத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு மாணவிகள் என இன்று ஒரே நாளில் ஒரு ஆசிரியர் உட்பட 8 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 433

0

0