இரட்டை இலையுடன் போட்டி போடும் இரட்டை ரோஜா… உண்மையில் இவர் தான் ஜெயலலிதா மகளா?!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2023, 3:59 pm
Jaya Daughter - Updatenews360
Quick Share

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா மகள் போட்டி..? புதிய கட்சியுடன் சின்னம் அறிவிப்பு!!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெ ஜெயலட்சுமி கூறியதாவது ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான். சோபன் பாபு எனது தந்தை எனது தாயாரை பல காரணங்களுக்காக நான் சந்திக்கவில்லை.

அவர் முதல்வராக இருந்த போது இரு முறை சந்தித்து உள்ளேன். மருத்துவமனையில் இருந்தபோது ஒருமுறை சந்தித்தேன். ஜெயலலிதா அவர்கள் நடிகையாக இருந்த போது அவர் வசித்த வீட்டில் நான் வசித்து வருகிறேன். அங்கு அவர் எழுதிய டைரி உள்ளது. அவர் பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்டவை என் வசம் உள்ளன.

பல காரணங்களுக்காக நான் வெளிப்படையாக அவரது மகள் என்று என்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா மகள் என்பதற்கான டி.என்.ஏ டெஸ்ட் உள்ளிட்டவைகளை நீதிமன்றத்தில் கொடுக்க உள்ளேன் .தற்போது புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளேன்.

அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் என்பது எனது புதிய கட்சியின் பெயர். கட்சியின் சின்னமாக இரட்டை ரோஜா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரட்டை இலைக்கு பதிலாக, போட்டியாக இரட்டை ரோஜா சின்னம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக தான் கொடைக்கானல் வந்துள்ளேன்.

எதிர்வரும் எம்பி தேர்தலில் எனது கட்சி 39 தொகுதிகளிலும் போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. எனது அம்மா ஜெயலலிதாவின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

எனது கட்சியின் கொள்கையை எனது அம்மாவின் ஆசைதான். எனது அம்மா ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் உள்ளது. பலர் இதற்கு காரணமாகவும் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். உடன் அவரது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Views: - 311

0

0