பிளாஸ்டிக் கவரை சுற்றி 7 வயது மகனை கொன்ற வழக்கறிஞர்.. விடிந்ததும் நடந்த விபரீதம் : புதுவீட்டில் நடந்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2023, 3:46 pm
Autism - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளிதன் (40)வயதான எம்.இ., பிஎல் பட்டதாரியான இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்த நிலையில் இவருக்கும் தக்கலை மணலி பகுதியை சேர்ந்த பயோ டெக்னாலஜி முடித்த சைலஜா(36) என்பவருக்கும் கழிந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது

இந்த தம்பதியருக்கு 7-வயதில் ஜீவா என்ற மகனும் உண்டு பெங்களூரில் வசித்து வந்த தம்பதியர் கழிந்த மூன்று வருடங்களுக்கு முன் தக்கலையில் ஒரு வாடகை வீட்டில் குடிபெயர்ந்த நிலையில் மணலி பகுதியில் கழிந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறியுள்ளனர்.

முரளிதரனும் ஐடி கம்பெனி பணியை விட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார்

இந்த நிலையில் தினமும் மாலை தனது மகள் சைலஜா வீட்டிற்கு பால் கொண்டு செல்லும் அவரது தந்தை கோபால் வழக்கம் போல் சனிக்கிழமை மாலை வீட்டிற்கு சென்ற போது பூட்டியிருந்ததால் சத்தம் போட்டு அழைத்துள்ளார்.

வெகு நேரமாகியும் அரவமின்றி கதவு திறக்காத நிலையில் சந்தேகமடைந்த அவர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மருமகன் முரளிதரன் வீட்டின் ஹாலில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையிலும் மகள் சைலஜா மற்றொரு அறையில் தூக்கிட்ட நிலையிலும் பேரன் ஜீவா முகம் பாலித்தீன் கவர்கள் முகற்றில் கட்டப்பட்ட நிலையில் கட்டிலிலும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து டிஎஸ்பி உதயசூரியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்

விசாரணையில் எம்.இ பில் முடித்து பெங்களூரில் ஐடி கம்பெனியில் பணியாற்றிய முரளிதரன் மனைவி சைலஜாவுடன் அங்கு வசித்து வந்துள்ளார் இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் கழிந்த 7-வருடங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது

முதலில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை ஜீவா பின்னர் மெல்ல மெல்ல ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்த நோய்க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் கொரோனா காவகட்டத்தில் வேலை இழந்த முரளிதரன் மனைவியின் சொந்த ஊரான தக்கலைக்கு குடிபெயர்ந்துள்ளார்

தற்போது பிஎல் படித்திருந்த அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் கழிந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறிய முரளிதரன் சைலஜா தம்பதியருக்கு வேறு குழந்தைகள் இல்லாத நிலையில் ஒரே ஆசை மகனும் ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிப்படைந்ததாலும் பணம் இருந்து பாச மகனின் நோயை தீர்க்க முடியாத அவர்கள் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் மனமுடைந்த தம்பதியர் முதலில் தனது மகன் ஜீவா விற்கு அவரது நோய்க்காக மருத்துவர்களால் வழங்கப்பட்ட டானிக் மருந்தை அதிக அளவில் கொடுத்து மயக்கமடைய செய்து அவரது முகத்தை பாலித்தீன் கவரால் கட்டி கட்டிலில் போட்டு விட்டு முரளிதரன் வீட்டில் ஹாலில் மின் விசிறியிலும் சைலஜா அறையில் தனது மகன் கட்டிலில் கிடக்க அந்த அறையிலேயே மின் விசிறியிலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மகன் தீராத ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மனமுடைந்த வழக்கறிஞர் ஒருவர் மகனையும் கொன்று மனையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 329

0

0