ஆசைவார்த்தை காட்டி 15 சிறுமியை சீரழித்த அலெக்ஸ்… உள்ளே தள்ளியது போலீசார்

20 September 2020, 8:24 pm
Quick Share

சென்னை: சென்னையில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த நபரை போலீசார் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 14 ம் தேதி முதல் காணவில்லை என சிறுமியின் தந்தை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் சிறுமியை நேற்று புழல் காவாங்கரை பகுதியில் மீட்டனர். இதையடுத்து அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,

சிறுமியை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அலெக்ஸ் வயது 22 என்ற நபர் திருமணம் செய்வதாக கூறி ரெட்டில்ஸ் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். மேலும் தினமும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து அலெக்சை கைது செய்த  புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Views: - 4

0

0