பைக்கில் புகுந்த பாம்பு… திணறிய தீயணைப்பு வீரர்கள் : பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நடந்த காட்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2022, 3:40 pm
Snake - Updatenews360
Quick Share

திருச்சி அருகே காவல் நிலையத்தில் இருந்த பைக்கில் சாரை பாம்பு – பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பாம்பை உயிருடன் பிடிக்க முடியாதால் அடித்து கொன்றனர்.

திருச்சி மாவட்டம், முசிறியில் சட்டம் ஒழுங்கு E1காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் நிறுத்தி இருந்த பைக் ஒன்றில் சாரை பாம்பு ஒன்று புகுந்து மறைந்து கொண்டது.

காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த ஒருவர் இதனை கண்டு அங்கிருந்த
காவல் நிலையத்தில் தெரிவித்தனர். பைக்கை தீவிரமாக சோதனை செய்தபோது பாம்பு டேங்க் பகுதியில் பத்திரமாக ஒளிந்து கொண்டது.

பாம்பை வெளியில் எடுக்க எவ்வளவோ முயற்சி காவல்துறையினர் இயலவில்லை . இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடிக்க எடுத்த முயற்சியும் பயன் இல்லாமல் போனது.

இதை அடுத்து காவல்துறையினர் அந்த பைக்கை அருகில் இருந்த வாட்டர் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று தண்ணீரை வேகமாக பிய்ச்சி அடித்து பாம்பை வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர்.

அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. பின்னர் மெக்கானிக் ஒருவர் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் டேங்க் அகற்றப்பட்டது. அப்போது பாம்பு ஆக்ரோசத்துடன் வெளியே வந்தது.

இதனால் அச்சமடைந்த அங்கிருந்த வாலிபர் ஒருவர் கையில் இருந்த குச்சியால் பாம்பை அடித்துக் கொன்றார். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 463

0

0