“ஆவேசம்” படம் பார்க்க சென்றவர்கள் நிஜத்திலேயே ‘ஆவேசம்’… கோவையில் பிரபல திரையரங்கில் நள்ளிரவில் பரபரப்பு..!!!

Author: Babu Lakshmanan
20 April 2024, 11:23 am
Quick Share

“ஆவேசம்” திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஏ.சி வேலை செய்யாததால் ரசிகர்கள் கோவை கே.ஜி திரை அரங்கு நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ளது கே.ஜி திரையரங்கம். கோவையில் பிரபலமான இந்த திரையரங்கில் ஆவேசம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது. நேற்று மாலை திரையரங்கில் படம் போட்ட பின்பு ஏ.சி வேலை செய்யாமல் இருந்ததாக ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க: நகரி தொகுதியில் மீண்டும் போட்டி… வேட்புமனுவோட தமிழகம் வந்த அமைச்சர் ரோஜா ; திருத்தணியில் சென்டிமென்ட்..!!!

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் திரையரங்கு நிர்வாகத்தில் புகார் அளித்தனர். ஆனால் நிர்வத்தினரிடம் இருந்து முறையாக பதில் வராததால் டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தருமாறு கூறி, அங்கு வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கோவையில் புகழ்பெற்ற திரையரங்கில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 150

0

0