திமுகவை கம்யூனிஸ்ட் விமர்சிக்கும் போது எங்க போனீங்க…? பாஜகவுடனான மோதல் விவகாரத்தில் செம்மலை பதில் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
15 March 2023, 4:07 pm
Quick Share

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குபதிவு செய்ததை கண்டித்து,சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை விமான நிலையத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, அமமுக நிர்வாகி எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனிடைய அதிமுக கட்சி நிர்வாகிகள் அவதூறு பேசிய நபர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது பொய் வழக்கு போட்டு திமுக வஞ்சிப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், திமுக அரசு போட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதனிடையே அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை பேட்டியளித்தார். அப்போது, அதிமுக,பாஜக நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திமுக கூட்டணி கட்சியின் திமுக ஆட்சி குறித்து விமர்சிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், கூட்டணி கட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திமுக ஆட்சி குறித்து விமர்சித்துள்ளார் என்றும்,. ஆட்சியாளர்களை குறைசொல்லி உள்ளதாக கூறினார்.

மேலும், ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி எதுவாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்களது கருத்துக்களையும், மாறுபாடுகளையும் குறிப்பிட்டு சொல்வதில் எந்த தவறும் இல்லை, என தெரிவித்தார்.

Views: - 274

0

0