அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைக்க சம்மதம்? பண்ணை வீட்டில் ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சந்திப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2022, 12:51 pm
RB udayakumar Meet OPS - Updatenews360
Quick Share

தேனி : பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசி வருவது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஓ.பி.எஸ்.பண்ணை வீட்டில் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அப்போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அத்தனை பேரையும் கட்சியில் இணைக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் எந்தவித நிபந்தனையுமின்றி கட்சியில் இணைக்க வேண்டும் எனஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர் செல்வத்திடம் அளிக்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் ஆர் பி உதயகுமார் தேனி மாவட்ட செயலாளர் செய்யது கான் முன்னாள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் முருக்கொடை ராமன் ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.

மேலும் செல்லூர் ராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

Views: - 430

0

0