இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்னென்ன பதவி இடங்கள் ஒதுக்கீடு: பட்டியலை வெளியிட்டது திமுக..!!

Author: Rajesh
3 March 2022, 9:57 am
Quick Share

திருப்பூர்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவியிடங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க., 23 வார்டுகளில் வென்றது. இந்திய கம்யூனிஸ்டு – 6, ம.தி.மு.க – 3, காங்கிரஸ் -2, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.ம.க., தலா ஒரு வார்டு என வென்றுள்ளன.

கூட்டணிக்கட்சியினரின் துணையுடன் தான் மேயர் பதவியை தி.மு.க.,வால் கைப்பற்ற முடியும். இந்நிலையில் திருப்பூர் துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியது.

பவானி, புளியங்குடி, அதிராம்பட்டினம், போடிநாயக்கனூர் நகராட்சி துணைத்தலைவர் பதிவிகளும், 4 பேரூராட்சி தலைவர்கள், 6 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளும் சிபிஐக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 745

0

0