நவ.20ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம்

17 November 2020, 11:02 pm
Quick Share

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நவ.20-ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம்வருகிற 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற உள்ள கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் .


இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நவ.20-ல் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

Views: - 29

0

0