மத்திய சிறை அருகே உள்ள குப்பைத் தொட்டியில் AIR GUN : வீசியது யார்? சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2022, 11:23 am
Jail Airgun in Basket - Updatenews360
Quick Share

மதுரை : மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் கையடக்க துப்பாக்கி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மத்திய சிறைச்சாலை வாசல் அருகே அமைந்திருந்த குப்பை தொட்டியில் இன்று வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

அப்போது அந்த குப்பை தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க ஏர்கன் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் துப்பாக்கி குப்பை தொட்டிகள் கிடப்பதே குறித்து கரிமேடு காவல் நிலையத்திற்கு சிறை நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்ததில் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து கையடக்க ஏர்கன் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருப்பதால் யாரேனும் குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Views: - 587

0

0