அனைத்து பல்கலை., செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடக்கும் : உயர்கல்வித்துறை அறிவிப்பு

7 December 2020, 6:40 pm
Cbe College Open - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடக்கும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டதுடன், கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.

இதுவரை ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்ற நிலையில், குறிப்பிட்ட அளவிலான மாணவர்கள் மட்டுமே நேரடியாக வகுப்புகளுக்கு வந்திருந்தனர். எனவே, நடப்பு செமஸ்டர் நடத்தப்படும் முறை குறித்து மாணவர்களிடையே குழப்பம் நிலவி வந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான அட்டவணையை உயர்கல்வித்துறையிடம் அளித்துள்ளன. அதன்படி, அனைத்து பல்கலை.களிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

Views: - 0

0

0