மார்ச் 3ம் தேதி முதல் அமமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் : டிடிவி தினகரன் அறிவிப்பு

25 February 2021, 3:20 pm
TTV dinakaran 01 updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு மார்ச் 3ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகம்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ நடைபெறவுள்ள சட்டப்‌ பேரவைத்‌தேர்தலில்‌ அம்மா மக்கள்‌ முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள்‌ வருகிற மார்ச் 3ம் தேதி முதல்‌ 10ம் தேதி வரை காலை 10 மணி முதல்‌ மாலை 6 மணி வரை சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக்‌ கழக அலுவலகத்தில்‌, விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப்‌ படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்‌.

படிவத்தில்‌ கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்‌ முழுமையாக பூர்த்தி செய்து தலைமைக்‌ கழகத்தில்‌ ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்‌.

விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை
தமிழ்நாடு ரூ. 10,000/-
புதுச்சேரி ரூ. 5,000/-

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அளிக்க கடைசி நாள்‌ : 10.03.2021, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 17

0

0