தனியார் நிறுவனங்களுக்கு நீர்நிலைகளை தாரை வார்ப்பதா..? தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
26 August 2023, 2:34 pm
Quick Share

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 21-ம் நாள் நிறைவேற்றப்பட்ட ”தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்ட முன்வரைவுக்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து கடந்த 17-ம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் இந்த சட்டம் தேவையற்றது. தனியார் தொழில் நிறுவனங்களுக்கு நீர்நிலைகளுடன் கூடிய நிலங்களை தாரை வார்க்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மொத்தம் 41,127 ஏரிகள் இருந்தன. அவற்றில் சுமார் 15 ஆயிரம் ஏரிகள் இப்போது என்ன ஆயின என்பதே தெரியவில்லை.

இப்போது 27 ஆயிரம் ஏரிகள் மட்டும் தான் பயன்பாட்டில் உள்ளன. குறைந்தபட்சம் இந்த நீர்நிலைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்தால், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 211

0

0