சென்னையில் விற்பனைக்காக 10 கிலோ கஞ்சா வைத்திருந்த ஆந்திர இளைஞர் கைது : சிக்கலில் பிரபல தனியார் கல்லூரி…!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2022, 10:10 pm
Cannabis Seized 1 - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்ய எடுத்து சென்ற 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்த போலீசார் ஆந்திராவை சேர்ந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம்  மாவட்டம் வல்லக்கோட்டை  பகுதியில் போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறையின் ஆய்வாளர் வசந்தி அவர்கள் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சாய் குமார் (வயது 22) என்பவரை பிடித்து சோதனை செய்ததில் அவர் பையில் 5 பொட்டலங்களாக 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

அவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சாய்குமார் இடம் விசாரணை செய்ததில் SRM கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்காக இந்த கஞ்சா பார்சல் விற்பனை செய்ய எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சாய்குமார் லஞ்ச ஒழிப்பு சட்டம் , போதை மருந்துகள் உளவெறியூட்டம் சட்டம் 1985 கீழ் வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சாய்குமார் அளித்த தகவலின் பேரில் எஸ்ஆர்எம் கல்லூரியில் விரைவில் சோதனை செய்யப்படும் எனவும் சமீபகாலமாக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருவது வருத்தத்தை அளிக்கின்றது எனவும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறையின் ஆய்வாளர் வசந்தி கூறினார்.

Views: - 592

0

0