விளம்பரத்துக்காக முதலமைச்சர் மீது விமர்சனம் வைக்கிறார் : அண்ணாமலை மீது அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2022, 6:08 pm
Anbil Mahesh -Updatenews360
Quick Share

பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் பயணம் செய்வதை ஸ்டைலாக நினைக்கிறார்கள், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேரடி நியமன வட்டாராக்கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி துவக்க விழா இன்று நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள பில்லர் மையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி., பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி., சட்டமன்ற உறுப்பினர்கள்., மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்., மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தென்மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள் 95க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முதற்கட்டமாக நிர்வாகத் திறன்மேம்பாட்டு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து.,

செய்தியாளர் சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக பள்ளி கல்வித்துறை பெற்றுத் தந்துள்ளது., நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அனுப்புற ஆளுநரை சந்தித்து பேசினோம் நீட் தேர்வு விவகாரம் குறித்து டெல்லிக்கு அனுப்புவதாக கூறி உள்ளார். விரைவில் தமிழக முதல்வர் குடியரசு தலைவரை சந்தித்து பேசுவார் அதன் மூலம் நீட் தேர்வுக்கு நல்லதொரு முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொடர்பாக., தற்போது பள்ளி மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி 1.80 லட்சம் மையங்கள் உள்ளது., பள்ளி மாணவர்களுக்கு குட் டச், பேட் டச் குறித்து இதன் வாயிலாக விழிப்புணர் ஏற்படுத்த படுகிறது. 18 வயது உள்பட்ட பள்ளி மாணவ-மாணவியர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் குறித்த நேரத்தில் பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் பயனடைவார்கள். ஆனால்., பள்ளி மாணவர்கள் style ஆக செல்ல வேண்டும் என்பதற்காக பேருந்தில் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றனர்.

ஒட்டுமொத்த தமிழக மக்களும் விரும்பும் தலைவர் தமிழக முதல்வரை விமர்சனம் செய்து அண்ணாமலை விளபரத்திற்காக தேடுகிறார். பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை தேர்ந்தெடுத்து தமிழக பட்ஜெட்டில் இதுகுறித்து மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் மூலம் 7500 கோடி நிதி ஒதுக்கி பேராசிரியர் அன்பழகன் பெயரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்க உள்ளோம்., அதன் மூலம் பள்ளி கட்டிடங்கள் சரி செய்யப்படும்.

Views: - 728

0

0