கடை வியாபாரிகளை தாக்கி ஷட்டரை சாத்தி அட்டூழியம் : வீடியோ எடுத்தவரை ஆபாச வார்த்தையால் திட்டிய போதை ஆசாமி.. பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2022, 5:57 pm
Drunken Man - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : மது போதையில் வியாபாரிகளை தாக்கிய நபரை போலீசார் கைது செய்த நிலையில் வீடியோ எடுத்தவரை சகட்டு மேனிக்கு திட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கேசவ புரத்தைச் சேர்ந்தவர் சம்பந்தம். இவர் மது அருந்திவிட்டு மதுபோதையில் அப்பகுதியில் உள்ள அடகு கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மகன் ஆகியோரை கடையின் ஷட்டரை மூடி தாக்கும் காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பிரதாப் கடந்த 13-ஆம் தேதி சம்மந்தம் தன்னை தாக்கியதாக அடகு கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை சம்பவ இடத்திற்கு சென்று கைது செய்து நடத்திய விசாரணையில் மதுபோதையில் நான்கு கடைகளில் பிரச்சனை செய்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 786

0

0