சாலை பணியின் போது பணியாளர் மீது தாக்குதல் : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2023, 10:09 pm
Cbe Corp - Updatenews360
Quick Share

சாலை பணியின் போது பணியாளர் மீது தாக்குதல் : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம்!!

ஒப்பந்த பணி செய்துவரும்‌ சமயத்தில்‌ தாக்குதல்‌ நடத்தியவர்கள்‌ மீது நடவடிக்கை வலியுறுத்தி நாளை ஒப்பந்ததார்கள்‌ சார்பாக ஒரு நாள்‌ வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.

கோவை மாநகராட்சியின்‌ 92வது வார்டு பகுதியில்‌ உள்ள குனியமுத்தூர்‌ காமராஜர்‌ வீதியில்‌ சாலை பணி நடந்து வருகிறது. வெற்றி கன்ஸ்டிரக்சன்‌ நிறுவனத்தினர்‌ பணி நடத்தி வருகிறார்கள்‌. நேற்றை தினம்‌பணி நடந்து கொண்டிருந்த போது, அதே பகுதியில்‌ வசித்து வரும்‌ நாகராஜ்‌ என்பவர்‌ அங்கே வந்துள்ளார்‌.

அவர்‌, தனது வீட்டிற்கு ரேம்ப்‌ அமைத்து தர வேண்டும்‌ என கேட்டார்‌. அப்போது சாலை பணியில்‌ இருந்த நிறுவனத்தின்‌ மேற்பார்வையாளர்‌, ஊழியர்கள்‌ தற்போது சாலை வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்‌ அது முடிந்த பின்னர்‌ ரேம்ப்‌ அமைத்து தருவதாக கூறியுள்ளனர்‌.

ஆனால்‌ நாகராஜ்‌ இதனை ஏற்காமல்‌ ரேம்ப்பை அமைத்து விட்டு சாலையை போடு என வாக்குவாதத்தில்‌ ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த நாகராஜின் மகன் ஒப்பந்த நிறுவன ஊழியரான சவுந்தரராஜ்‌ என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காயமடைந்த அவர்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்‌. மேலும் தாக்குதல்‌ நடத்தியவர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பாக குனியமுத்தூர்‌ போலீசில்‌ புகார்‌ அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணிகள்‌ செய்யும்‌ இடங்களில்‌ நடத்தப்படும்‌ தாக்குதல்‌ தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடமும்‌ புகார்‌ தெரிவிக்கப்பட்டது. இனி இதுபோன்ற செயல்பாடுகள்‌ இனி வரும்‌ காலங்களில்‌ தொடர கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.

ஒப்பந்த நிறுவனத்தினரை தாக்கியது சரியான செயல்‌ அல்ல. பணிகளில்‌ குறைபாடு இருந்தால்‌ மாநகராட்சி ஆணையாளர்‌, மண்டல அதிகாரிகள்‌ மற்றும்‌ பொறியாளர்களிடம்‌ புகார்‌ தரலாம்‌ அதை விட்டு விட்டு வேலை செய்யும்‌ நிறுவனத்தினரிடம்‌ வாக்குவாதம்‌ செய்வது வேலையை நிறுத்துவது போன்றவை சமீபகாலமாக நடைபெறுவந்தது.

அதன்‌ உச்சகட்டமாக ஊழியர்‌ மீது தாக்குதல்‌ நடத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள்‌ பணி செய்யும்‌ இடத்திற்கு செல்லும்‌ போது அவர்கள்‌ மீதும்‌ இதுபோன்ற தாக்குதல்‌ நடத்த கூடிய அசாதாரண சூழ்நிலை உள்ளது.

எனவே புகார்களை பொதுமக்கள்‌ முறைப்படி அதிகாரிகளிடம்‌ தெரிவிக்க வேண்டும்‌. அதை விட்டுவிட்டு ஒப்பந்ததார்களிடம்‌ வாக்குவாதம்‌ செய்வது பணிகளை நிறுத்துவது போன்றவை சமிபகாலமாக அதிகரித்து வருகிறது, அதன்‌ உச்சகட்டமாக ஒப்பந்ததாரரின்‌ ஊழியரின்‌ மீது தாக்குதல்‌ நடத்தப்பட்டது இது மிகவும்‌ கண்டிக்கதக்கது கண்டனத்திற்குறியது.

எனவே நாளை (06.10.2023 ம்‌ தேதி) மாநகராட்சி பகுதியில்‌ நடைபெறும்‌ அனைத்து பணிகளையும்‌ நிறுத்தி ஒரு நாள்‌ அடையாள வேலை நிறுத்தம்‌ செய்யவுள்ளோம்‌. மேற்படி நபரின்‌ மீது நடவடிக்கை எடுக்காவிடில்‌ வேலை நிறுத்தம்‌ தொடரும்‌.

போர்வெல்‌ இயக்கம்‌ மற்றும்‌ மிக அத்தியாவிசய பணிகள்‌ தவிர வேறு அனைத்து பணிகளும்‌ நடைபெறாது. சங்கத்தினர்‌ இந்த பிரரசனைகளில்‌ ஒற்றுமையாக இருந்து தீர்வு காண வேண்டும்‌. வணக்கத்திற்குரிய மேயர்‌ அவர்கள்‌, துணை மேயர்‌ அவர்கள்‌, அனைத்து மண்டல தலைவர்கள்‌ மற்றும்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ ஓப்பந்ததார்கள்‌ பணி செய்யும்‌ போது எந்தவித இடையூறும்‌ ஏற்படாதவாறு எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென அவர்களிடத்திலும்‌ கோரிக்கை வைத்துள்ளோம்‌.

இது கண்டனத்திற்குரிய மிக மோசமான செயலாகும்‌. இனிவரும்‌
காலங்களில்‌ இது போன்று அசம்பாவிதம்‌ எங்கும்‌ நடைபெறாதவாறு
பார்த்துக்‌ கொள்ளுமாறு சங்கத்தின்‌ மூலம்‌ கோரிக்கை வைக்கப்பட்டது.

Views: - 342

0

0