பயணிகள் ரயிலில் கஞ்சா கடத்த முயற்சி… 16 கிலோ கஞ்சா பறிமுதல் ; வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
8 September 2022, 2:32 pm
Quick Share

வேலூர் அருகே பயணிகள் ரயிலில் கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை காட்பாடி ரயில்நிலைய போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில்கள் மூலம் தமிழகத்திற்கும், தமிழகம் வழியாக மற்ற மாநிலங்களுக்கும் கஞ்சா கடத்துவதை தடுக்க வேலூர் மாவட்ட காட்பாடி இரயில்வே இருப்பு பாதை காவலர்கள் காட்பாடி வரும் ரயில்களில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து எஸ்வந்பூர் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் சந்தேகத்திற்கிடமாக இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கஞ்சா கடத்துவது தெரிய வந்தது.

இதனையடுத்து கஞ்சா கடத்திய ஒடிசாவை சேர்ந்த மனோனன் சாகு (33), குஞ்சபனாபேரா(31) ஆகிய இருவர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Views: - 422

0

0