நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி… விசாரணையில் சிக்கிய SWIGGY ஊழியர் : பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2023, 6:05 pm
Chain Snatch- Updatenews360
Quick Share

கோவை ஜிஒஇ ரெசிடென்சி பகுதியில், நேற்று காலை, நடந்து சென்ற கவுல்சல்யா என்ற பெண்ணின் நகைப்பறிக்க முயற்சி சம்பவத்தில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், விமான நிலையம் பின்புறம் வாகனத்தை மடக்கி பிடித்து இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக , கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், கோவை ஜிவி ரெசிடென்சி பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவரை போலீசார் சிசிடிவி உதவுடன் சக்திவேல் மற்றும் அபிஷேக் என இருவரை கைது செய்துள்ளனர்.

அபிசேக் குமார் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர், இவர் மீது ஏற்கனவே. இதுபோன்று நகைப்பறிப்பு வழக்குகள் உள்ளது. swiggyல் பணியாற்றி வந்தவர், சக்திவேல் – திருவண்ணாமலையை சேர்ந்தவர்- அவர் மீது எந்த வழக்கும் இல்லை. தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏதேட்சையாக நடந்த சம்பவம், இந்த சம்பவத்திற்கு எந்தவித திட்டமிடலும் இல்லை, பொதுமக்கள் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை பொருத்தி காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்

சிசிடிவி கேமராக்கள் இந்த சம்பவத்தில் பிடிக்க பெரிதும் உதவியாக இருந்தது. பிடிபட்ட கார் நம்பர் பிளேட் இல்லை, இருப்பினும் காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் அடிப்படையில் பிடிக்கப்பட்டு உள்ளது
சிங்காநல்லூர் உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு விரைவாக சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

காவலர்களின் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இந்த வழக்கில் ஈடுபட்டவர்களை விரைவாக பிடிக்க உதவியாக இருந்தது கடந்த 2 மாதத்தில் காவல்துறையின் ரோந்து காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிக்கும் சம்பவம் வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த 2 மாதத்தில் 800 சிசிடிவி கேமிராக்கள் பல்வேறு பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ளது. இதனால், குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளதோடு, குற்றவாளிகளும் கண்டுபிடிக்க உதவியாக உள்ளது என்றார்.இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, துணை ஆணையாளர் சந்தீப் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Views: - 288

0

0