நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்… அலர்ட்டாகும் கோவை… முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

Author: Babu Lakshmanan
5 December 2022, 12:43 pm
Quick Share

கோவை ; பாபர் மசூதி இடிப்பது தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்திலும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மனு அளிக்க வரும் அனைத்து பொதுமக்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் எடுத்து வரும் உடைமைகளும் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளைக் கொண்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Views: - 367

0

0