இந்தி தெரியாததால் வங்கிக் கடன் மறுப்பா..? பழிவாங்கப்பட்ட மேனேஜர்..! களத்தில் குதிக்கும் வங்கி ஊழியர் சங்கம்..!

Author: Sekar
6 October 2020, 2:10 pm
Loan_Denial_Hindi_UpdateNews360
Quick Share

கடந்த மாதம் ஜெயங்கொண்டத்தில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ஒருவருக்கு இந்தி தெரியாததால் இந்தியன் ஓவர்சீஸ் வாங்கி கடன் கொடுக்க மறுத்ததாக வெளியான சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்த விவகாரத்தில் மேனேஜர் பழி வாங்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் பாலாசுப்பிரமணியன் தற்போது ஜெயங்கொண்டத்தில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள யுத்தப்பள்ளம் எனும் கிராமமாகும்.

இவருக்கு ஜெயங்கொண்டம் மற்றும் யுத்தப்பள்ளம் என இரு பகுதிகளிலும் சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள அவரது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து இந்தியன் ஓவெர்சீஸ் வங்கியை அணுகியதாகக் கூறப்படுகிறது.

அங்கு மேலாளராக பணியாற்றும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சீனியர் மேனேஜர் விஷால் படேல் இந்தி தெரியாததால் லோன் தர மறுத்து விட்டதாக கடந்த செப்டம்பரில் சர்ச்சை கிளம்பியது.

ஆனால் உண்மையில் 76 வயதான அவருக்கு வயது மூப்பு காரணமாகவே இந்தியன் ஓவெர்சீஸ் வங்கி மட்டுமல்ல வேறு எந்த வங்கியிலிருந்தும் கடன் தர மாட்டார்கள் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தை தேவையில்லாமல் திசை திருப்பி, மொழி சாயம் பூசி அரசியல் செய்வதாக வங்கி அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  

மேலும் இந்த விவகாரத்தில் வங்கி நிர்வாகம், அரசியல்வாதிகளின் வாயை அடைப்பதற்காகவும், மொழியின் மூலம் உருவாகும் சர்ச்சையை தவிர்ப்பதற்காகவும் மட்டுமே விஷால் படேல் மீது நடவடிக்கை எடுத்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 42

0

0