தமிழகத்தில் பீஸ்ட் படம் வெளியிட தடை விதிக்கப்படுகிறதா? தமிழக அரசுக்கு கோரிக்கை.. அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
5 April 2022, 5:49 pm
Beast -Updatenews360
Quick Share

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் செல்வராகவன்,யோகி பாபு, அபர்ணா தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

🔴Official: Beast Release Date | Thalapathy Vijay | Pooja Hegde | Nelson |  Anirudh Ravichander - YouTube

இந்த படத்தின் ட்ரெய்லர் , பாடல்கள், போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகவுள்ளது.

Beast trailer: Vijay's 'best and most notorious' super spy will save a mall  from terrorists with so much style. Watch - Hindustan Times

இந்த நிலையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்துள்ளதால் படத்தை தடை செய்வதாக குவைத் அரசு அறிவித்துள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Thalapathy Vijay spotted in an aircraft: Massive update on 'Beast'! - Tamil  News - IndiaGlitz.com

இந்த நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாகக் கொண்டு, இஸ்லாமியர்கள் என்ற தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை திரைத்துறையினர் உருவாக்கிவருகின்றனர்.

தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்களைக் கூட திரைப்பட கதாபாத்திரங்களில் இடம் பெற்றால் அதற்கு கடும் எதிர்ப்புகளை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதைப் பார்த்துவருகிறோம்.

ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போல தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.

Beast Mode Thalapathy Vijay | Actor photo, Vijay actor, Spiderman movie

2015 பெரு வெள்ளத்தின்போது இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணிகளை யாரும் மறந்துவிட முடியாது. கொரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை சொந்தபந்தங்கள் கூட தொட மறுத்த உடல்களை, அடக்கம் செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்புகள். இப்படி பேரிடர் என்று வந்துவிட்டால், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து களத்தில் இறங்கி நிவாரண பணிகளை இஸ்லாமிய இளைஞர்கள் இன்று வரை செய்து வருவதை யாரும் மறுக்க முடியாது.

உண்மை நிலை இப்படி இருக்கும்போது இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக பீஸ்ட் திரைப்படத்தில் கதை இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைபிடித்துவருகின்றனர்.

இந்தச் சூழலில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தால் பிரச்னை ஏற்படும். எனவே, பீஸ்ட் திரைப்படம் வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 866

0

0