மகளிர் உரிமைத் தொகை மாதிரிதான்… திமுகவின் இந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு ; நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Author: Babu Lakshmanan
22 March 2024, 2:22 pm
Quick Share

மத்திய அரசின் நிதிகளை தொகுதிக்காக சரியான முறையில் பயன்படுத்துவேன் என்றும், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி பொய்யான வாக்குறுதி என்றும் மக்கள் மத்தியில் அது எடுபடாது என்றும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நயினார் நாகேந்திரன் இருக்கிறார் தற்பொழுது அவர் திருநெல்வேலி பாராளுமன்றம் வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாக கட்சி தலைமைக்கு அறிவித்ததோடு தலைமை அறிவிப்பு முன்பாகவே அவர் காரியாலையம் தேர்தல் பிரச்சாரம் என்று ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று பாரத ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு சால்வை போத்தியும். இனிப்பு வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பல்வேறு தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்பின்படி, நரேந்திர மோடி அவர்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவார் என்று கூறுகிறது. நான் வெற்றி பெறும் பட்சத்தில் எனது தொகுதிக்கு மத்திய அரசின் நிதிகளை முழுமையாக பயன்படுத்துவேன. தாமிரபரணி நதியை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை செய்வேன்.

சாலை போக்குவரத்து உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை மக்களுக்கு குறைவின்றி செய்துகொடுப்பேன். திமுக அரசு அறிவித்திருக்கும் சிலிண்டர் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு என்பது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் செயல். சட்டமன்றத் தேர்தலில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்று கூறி, ஒரு சில குடும்பத்தினருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். இதனால் நிறைய மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர்.

இந்த முறை தமிழகத்திலும் நிறைய இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். வருகின்ற 25ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

Views: - 159

0

0