விழுப்புரம் தனித் தொகுதியில் மீண்டும் முதல் நபர்… 14வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2024, 1:27 pm
Quick Share

விழுப்புரம் தனித் தொகுதியில் மீண்டும் முதல் நபர்… 14வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்!!

விழுப்புரம் தனி தொகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் முதல் நபராக உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் பகுதியை சேர்ந்த அரசன் (59) என்பவர் இன்று சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

அவர் 12,500 தேர்தல் வேட்பு மனுவுக்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் இதுவரை 4 சட்டமன்றத் தேர்தல், 4 பாராளுமன்ற தேர்தல், 5 உள்ளாட்சி தேர்தல் என 13 முறை ஏற்கனவே மனு செய்தவர். தற்போது 14வது முறையாக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • KANGUVA கங்குவா படத்திற்கு புதுப்புது சிக்கல்.. என்னதான் பிரச்னை!
  • Views: - 464

    0

    0