தமிழகத்தில் பாஜக தலைவர்கள் ரோடு ஷோ நடத்த மட்டுமே குறியாக உள்ளனர் : அமைச்சர் கேஎன் நேரு விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2024, 11:29 am
Durai
Quick Share

தமிழகத்தில் பாஜக தலைவர்கள் ரோடு ஷோ நடத்த மட்டுமே குறியாக உள்ளனர் : அமைச்சர் கேஎன் நேரு விமர்சனம்!!

திருச்சி தெற்கு மாவட்டம், மாநகரம் கிழக்கு தொகுதியில் இந்திய கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் தலைமையில் கலைஞர் நகர் பகுதி கழகச் செயலாளர் மணிவேல் முன்னிலையில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் CVS மஹால், ராமகிருஷ்ணா நகர்,,இலுப்பூர் ரோடு, கள்ளத்தெரு, உலகநாதபுரம், SS மஹால் தெரு, IMPERIAL பேக்கரி ரோடு, காஜா நகர், சமது பள்ளி, VSM மஹால், காஜா நகர் குடிசைப்பகுதி, மங்கம்மாள் சாலை கோகுலே தெரு, ஐயப்பநகர், சபரி மில்ஸ், லூர்துசாமி பிள்ளை தெரு, பாண்டியன் சாலை, ஐயர் தோட்டம், சாத்தனூர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

இதில் சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், மாவட்ட துணை செயலாளர் லீலாவேலு கழகத் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .

பிரச்சாரத்தில் உரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு, திருச்சிக்கு மட்டும் திமுக ஆட்சிக்கு வந்த இந்த ரெண்டே முக்கால் ஆண்டு காலத்தில் 3000 கோடிக்கு மேற்பட்ட தொகைகளை தந்து மாநகரின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நமது முதல்வர் உதவியுள்ளார்.

மாநிலத்திற்கு தேவையான நிதிகளை தராமல் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கிற . ஒன்றிய அரசை நீக்கிட தேர்தல் நெருங்கியவுடன் மாதத்திற்கு 4முறை தமிழகத்திற்கு வருகின்ற பாரதிய ஜனதா தலைவர்கள் தமிழகத்தில் ரோட்ஷோக்கலை நடத்தி வருகின்றனர். அவர்கள் ரோடு ஷோவை நடத்துவது மட்டுமே அவர்களது வாடிக்கையாக இருந்து கொண்டிருக்கிறது எனவே திட்டங்களைக் கொண்டு வர தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்கும் வேண்டும் என்றார்.

தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், நம் மாநிலத்திற்கு தேவையான நிதிகளை பெறுவதற்கு நமக்கு அனுசரணையான அரசு ஒன்றியத்தில் அமைந்திட கழகத் தலைவர் தமிழக முதல்வரின் ஆசி பெற்ற வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார் .

Views: - 225

0

0