இந்துக்களின் மனதை புண்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் : பாஜக அறிவிப்பு

Author: Babu Lakshmanan
13 October 2021, 8:24 pm
bjp - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : இந்துக்களின் மனதை புண்படுத்தும் தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுவதாக குமரி மாவட்ட தலைவர் தர்மராஜன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது ; குமரி மாவட்டத்தில் சரஸ்வதி பூஜைக்கு அலங்கார விளக்குகள் கலை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதித்து, இந்துக்களின் மனதை புண்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்துக்களின் பாரம்பரிய ஆச்சார விழாவிற்கு தடை விதிக்கும் தமிழக அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கையை கண்டித்து குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை காலை 10 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும், இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Views: - 239

0

0

Leave a Reply