மதுரையில் பாலம் இடிந்து விழுந்த விவகாரம்: 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு..!!

Author: Aarthi Sivakumar
29 August 2021, 11:23 am
Quick Share

மதுரை: மதுரையில் பாலம் இடிந்து விழுந்த விபத்து தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக 3 பேர் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை – நத்தம் பறக்கும் சாலைக்கு கட்டப்படும் மேம்பாலத்துக்கான பணிகளின் போது, இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஆகாஷ் சிங் என்பவர் உயிரிழந்தார்.

மேம்பாலம் இடிந்து விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு! - TopTamilNews

மதுரை-செட்டிக்குளம் இடையே 7.3 கி.மீ. தொலைவுக்கு ரூ.694 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் இடிந்து விழுந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக, பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேம்பாலம் இடிந்து விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு! - TopTamilNews

திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார், பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின் ஒப்பந்ததாரர் பாஸ்கரன் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக இயந்திரங்களை கையாள்வது, விபத்தில் உயிரிழப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 316

0

0