உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி : காய்கறி விற்பனைக்காக வந்த இடத்தில் சோகம்!!

19 July 2021, 4:12 pm
Erode Dead- Updatenews360
Quick Share

ஈரோடு : அந்தியூரில் அதிகாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் விளையும் காய்கறிகள் அந்தியூர் சந்தையில் விற்பனை செய்யவது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு விற்பனைக்காக பர்கூரிலிருந்து சித்தன், மாதேவன், சின்னபையன், ராஜேஷ், சிவமூர்த்தி மற்றும் மகேந்திரன் ஆகிய ஆறு நபர்கள் தேர்வீதியில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் முன்பு உறங்கி கொண்டிருந்தனர்‌.

இந்நிலையில் கட்டிடம் அதிகாலை சுமார் 1 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சித்தன், மகாதேவன் மற்றும் சின்னபையன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய ராஜேஷ், சிவமூர்த்தி மற்றும் மகேந்திரன் ஆகிய மூவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த இடத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Views: - 50

0

0