சாலையில் சென்ற கார் மின் கம்பத்தில் மோதி திடீர் தீ விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பிரபல தொழிலதிபர்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2022, 4:01 pm
Car Accident Fire -Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே சாலையில் சென்ற கார் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்தது. இதில் காரை ஓட்டி வந்த தொழிலதிபர் உயிர்தப்பினார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 44) தொழிலதிபர். இவர் புதுக்கோட்டையில் இருந்து காரில் தாராபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அப்போது முருகேசன் இரகம்பட்டி பிரிவு அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின்கம்பம் உடைந்து விழுந்தது.

அப்போது காரில் இருந்து தப்பித்து முருகேசன் உயிர் தப்பினார். இதற்கிடையில் மின்கம்பிகள் அறுந்து கார் மீது விழுந்ததில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 1041

0

0