வாயால் சிக்கிக் கொண்ட திமுக எம்.பி ஆ.ராசா : 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2021, 2:14 pm
A Raja -Updatenews360
Quick Share

முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

திமுக எம்.பி ஆ.ராசா, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, முதல்வரை பற்றி தரக்குறைவாக பேசினார். இதனால் தமிழகத்தில் உள்ள அதிமுக மட்டுமல்லாமல் ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடாத வகையில் நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகாரளித்திருந்தது.

இந்த நிலையில்,திமுக எம்பி ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக திட்டுதல், தேர்தல் நடத்தை விதிமீறல், கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய பரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Views: - 83

0

0