புதுச்சேரியில் ரிக்ஷாவில் சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு : பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran
2 August 2021, 5:51 pm
Pondy Theft - Updatenews360
Quick Share

புதுச்சேரி : ரிக்‌ஷாவில் சென்ற மூதாட்டியிடம் மர்ம நபர் ஒருவர் தங்க செயினை பறித்து செல்லும் சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி ஆசிரமத்தை சேர்ந்த வட இந்திய மூதாட்டியான கே.பி கவுல் (வயது 70) என்பவர் நேற்று மாலை செட்டி தெருவில் உள்ள ஒரு உணவகத்தில் தனக்கு உணவு வாங்கி கொண்டு அதே வீதியில் ரிக்‌ஷா வண்டியில் தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் ரிக்‌ஷாவில் சென்று கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கலியை அறுத்து செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

இது குறித்து அரபிந்தோ ஆசிரமத்தின் வழக்கறிஞர் பெரிய கடை போலீசாரிடம் அளித்த தகவலின் பேரில் போலீசார் சிசிடிவி கேமிரா காட்சிகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுப்பட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மேலும் அந்த மூதாட்டி தினமும் மாலை தனக்கு இரவு உணவு வாங்குவதற்காக ரிக்‌ஷாவில் வருவது வாடிக்கையாக கொண்டுள்ளதால் தொடர்ந்து அந்த நபர் மூதாட்டியை நோட்டமிட்டே அவர் கழுத்தில் அனிந்திருந்த செயினை பறித்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அதற்கு முந்தைய நாட்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Views: - 507

0

0