டாப்பில் வந்த சென்னை, கோவை : மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் இன்றைய நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2021, 7:05 pm
Delta Plus Corona - Updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று சற்று அதிகரித்துள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இரு நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இன்று 1,697 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,45,380 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, இன்று கோவையில் 215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 232 பேருக்கும், செங்கல்பட்டுவில் 114 பேருக்கும், ஈரோட்டில் 131 பேருக்கும், திருப்பூரில் 95 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35, 337 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,594 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 93 ஆயிரத்து 074 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 168

0

0