மளிகை கடைக்காரரை புரட்டியெடுத்த கஞ்சா போதை ஆசாமிகள்… காரணமே இல்லாமல் தாக்கிய நிலையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Author: Babu Lakshmanan
16 June 2022, 5:51 pm
Quick Share

சென்னை : போலீஸில் காட்டி கொடுத்ததற்காக மளிகை கடை வியாபாரியை கொடூரமாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை – மணலி சர்‌.சி.வி ராமன்‌ தெருவில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் மாரியப்பன். இவரை கடந்த 12ம் தேதி கஞ்சா போதையில் 5 பேர் கொண்ட இளைஞர் கும்பல் சரமாரியாக தாக்கியது. பின்னர், அவரது கடை மீது பெட்ரோல்‌ குண்டு வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், அந்த குண்டு வெடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் மாரியப்பன்‌ படுகாயமடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில்‌, கடந்த சில நாட்களுக்கு முன்‌ காவல்துறையினரால்‌ தேடப்பட்டு வந்த குள்ளமணி என்ற நபரை மாரியப்பனின்‌ கடைக்கு முன்‌ வைத்து போலீசார்‌ கைது செய்தனர்.

மாரியப்பன்தான் காட்டி கொடுத்ததால்தான் போலீசார் கைது செய்ததாக நினைத்து, அவரை கொடூரமாக தாக்கியது தெரிய வந்துள்ளது.

Views: - 484

0

0