இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்று மளமளவென குறைவு… சவரன் எவ்வளவு தெரியுமா…?

Author: Babu Lakshmanan
11 October 2023, 11:28 am
Gold Rate - Updatenews360
Quick Share

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்று மளமளவென குறைவு… சவரன் எவ்வளவு தெரியுமா…?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.5,372 ஆகவும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.42,976 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,400 ஆகவும், சவரனுக்கு ரூ.49 குறைந்து ரூ.35,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக  50 காசுகள் குறைந்து ரூ.75.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 378

0

0