இன்னைக்கும் இப்படியா..? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை ; சவரனுக்கு எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
27 October 2023, 10:55 am
Gold -Updatenews360
Quick Share

இன்னைக்கும் இப்படியா..? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை ; சவரனுக்கு எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா..?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,705ஆகவும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,673 ஆகவும், சவரனுக்கு ரூ 32 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,382 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 1128

0

0