இரு மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்…! வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

Author: Udhayakumar Raman
26 September 2021, 10:34 pm
Quick Share

சென்னை: வருகிற 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் சேலம் மற்றும் தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ளகிறார்.

வரும் செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த மாவட்டங்களில், வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, கரோனா தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது, கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கூறுகின்றன. முதலமைச்சர் சுற்றுப்பயணத்தின் போது, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அவருடன் உடனிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 121

0

0