ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி பலாத்காரம்… தப்பியோட முயன்ற நபரை விரட்டிப் பிடித்த மக்கள்.. கோவையில் பயங்கரம்..!!

Author: Babu Lakshmanan
28 June 2022, 9:04 am
Quick Share

கோவையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் 65 வயது மூதாட்டி அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வேலுச்சாமி என்பவர் மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மூதாட்டி கூச்சலிட்டதனால் அக்கம்பக்கத்தினர் திரண்டதை பார்த்து வேலுச்சாமி தப்பிக்க முயன்றார். இதனை தொடர்ந்து வேலுச்சாமி விரட்டிப் பிடித்த பொதுமக்கள், இது தொடர்பாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் வேலுச்சாமியை பொதுமக்களிடமிருந்து மீட்டு பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வேலுச்சாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையிலடைத்தனர்.

Views: - 191

0

0