கோவை மக்களின் கவனத்திற்கு… இடமாறும் குனியமுத்தூர் இரும்பு நடைபாலம்… எங்கு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
25 July 2022, 8:13 pm
Quick Share

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இரும்பு நடை பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தாததால் உயர்மட்ட இரும்பு நடை பாலத்தை அரசு பள்ளி அருகே மாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கோவை – பாலக்காடு சாலை குனியமுத்தூர் ரைஸ் மில் சந்திப்பு பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்க வசதியாக கடந்த 2016ஆம் ஆண்டு மாநகராட்சி சார்பில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் இரும்பினால் ஆன உயர்மட்ட நடைபாலம் கட்டப்பட்டது. ஆனால், இந்த பாலம் பொதுமக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை. பாலத்தில் ஏறுவதை தவிர்த்து சாலையில் செண்டர் மீடியாவின் இடைவெளி வழியாக மக்கள் இருபுறமும் சென்று வந்தனர்.

பொதுமக்கள் பயன்படுத்த உகந்ததாக இரும்பு நடைபாலம் இல்லை. இதனால், விளம்பர பதாகைகள் வைப்பதற்கும் மது போதை ஆசாமிகள் படுத்து உறங்குவதற்கு மட்டுமே பயன்படுகிறது அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “குனியமுத்தூரில் இரும்பு நடை பாலத்தை அகற்றி 250 மீட்டர் தூரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவ மாணவிகள் மிகுந்த பயன் அடைவார்கள் பாலத்தை இடமாற்றம் செய்ய ரூபாய் 35.60 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பாலத்தை இடமாற்றம் செய்யும் பணி விரைவில் தொடங்கும்,” என்றனர்.

Views: - 468

0

0