கோவை ஆர்.எஸ் புரத்தில் மாதிரி சாலை : மாநகராட்சி ஆணையர் அதிரடி ஆய்வு!!

3 September 2020, 11:16 am
Cbe Coporation Inspection - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல் கௌலிபிரவுன் ரோடு வரை மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இப்பணிகளில் சாலை அமைக்கும் பணி, பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி, மின்சார புதைவடம், கேபில்கள், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கு வகையில் குழாய் பதிக்கும் பணி, தொலைதொடர்பு கேபில் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், பாதசாரிகள் நடைபாதை, அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணி, ஒளிரும் விளம்பர பலகைகள் அமைக்கும் பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருவதை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து திவான்பகதூர் சாலையில் 41.33 கோடி மதிப்பீட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 373 கார்கள் நிறுத்துவதற்காக கட்டப்பட்டுவரும் மல்டிலெவல் கார்பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் பணிகளை விரைந்து
முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக கோயம்புத்தூர் ஒப்பணகாரவீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக இடைவெளியுடன் மாணவிகள் சேர்க்கை நடைபெற்றுவருதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி துணை ஆணையர் துராந்தகி, செயற்பொறியாளர்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டம் சரவணக்குமார்,
வைதீஸ்வரன்(மின்வாரியம்), உதவி செயற்பொறியாளர் சுகந்தி, பால்ராஜ்(மின்வாரியம்) உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், சத்தியமூர்த்தி, குடிநீர் பிரிவு இளம்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Views: - 8

0

0