வீட்டை திறந்து வைத்து தூங்குவோர் ஜாக்கிரதை… ரோந்து வரும் குடும்பம்… சிசிடிவியால் சிக்கிய சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
30 August 2021, 12:21 pm
Cbe crime1- updatenews360
Quick Share

கோவை: கோவையில் வீடுகளை திறந்து வைத்து தூங்குபவர்கள் இல்லங்களை குறி வைத்து திருடும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கடந்த 6 மாத காலமாக அதிகாலை நேரங்களில் வீடுகளுக்குள் புகும் நபர்கள் செல்போன்களை திருடி வந்தனர். மேலும், வீட்டைத் திறந்து வைத்து தூங்குபவர்களின் வீட்டை குறிவைத்து, அங்கு புகுந்து விடும் இந்த கும்பல், அங்குள்ள நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இவ்வாறு வெரைட்டி ஹால், குனியமுத்தூர், செல்வபுரம் காவல் நிலைய எல்லைகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனைத் தொடர்ந்து இந்த திருட்டு கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் நான்கு பேர் கொண்ட ஒரே கும்பல் என்பது போலீசாருக்கு தெரியவந்தது இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி சௌரியம்மாள், இவர்களது தம்பிகளான ரமேஷ் மற்றும் ஆனந்த் ஆகிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அக்காள் திருடும் செல்போன்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய அவரது தம்பிகள் உதவி வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

Views: - 252

0

0