தொடர்ச்சியாக பெய்யும் மழை.! நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.!!

4 August 2020, 2:33 pm
Noyyal River - Updatenews360
Quick Share

கோவை : மேற்கு தொடர்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உருவாகி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பயணித்து கரூர் மாவட்டத்தின் நொய்யல் கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது நொய்யல் ஆறு. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து மிகக்குறைவாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் கோவை மாவட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழையில் துவங்கி கனமழை பெய்து வருகிறது. இதனால் சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைசாவடி அணைக்கட்டை நிரம்பி நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீரானது பேரூர் படித்துறையை நிரப்பியபடி தற்போது சென்று கொண்டிருக்கிறது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது கோவையில் உள்ள குளங்களும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 11

0

0