பிரபல துணிக் கடை உரிமையாளரின் செயலுக்கு குவியும் பாராட்டு..!!

26 March 2020, 11:27 pm
Cbe Shree devi owner - Updatenews360
Quick Share

கோவை : கொரோனா நிவாரணப் பணியில் பிரபல துணிக்கடை உரிமையாளர் தானே இறங்கி பணிகளில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் அனைவரின் பார்வையையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

கொரோனாவின் கோரப்பிடியில் உலக நாடுகள் தத்தளித்து வரும் வேளையில், இந்தியாவில் வரும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே வந்து செல்கின்றனர். இந்நிலையில் உணவு இல்லாமல் தவித்து வரும் ஏழை எளியோர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள், பிரபல நிறுவனங்கள் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் கோவையை தலைமையிடமாக கொண்டுள்ள பிரபல துணிக்கடையான ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் தனது அளப்பரிய களப்பணியில் செயலாற்றி வருகிறது.

ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரும் நிர்வாக இயக்குநருமான திரு. சிவா, கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்காக மளிகை பொருட்களை லாரியில் இருந்து இறக்கி கொண்டு வருகிறார். எந்த ஒரு பாகுபாடின்றி யார் உதவியையும் எதிர்பாராமல் அவர் மளிகை மூட்டைகளை தனது முதுகில் ஏற்றி சுமந்து வந்த காட்சிகள் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், தங்களால் இயன்ற உதவிகளை செய்ய சிவா உதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.