நமக்கு நாமே திட்டம் மூலம் மீண்டும் பணிகளை தொடங்குங்கள் : கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு யோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2023, 8:03 pm
Vellalore - Udpatenews360
Quick Share

நமக்கு நாமே திட்டம் மூலம் மீண்டும் பணிகளை தொடங்குங்கள் : கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு யோசனை!!

கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ரூ.168 கோடி மதிப்பில் 10.60 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மாநகருக்கு வரும் வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நேரடியாக எல்&டி பை பாஸ் சாலையை பயன்படுத்தி வெள்ளலூருக்கு வந்து செல்லும் வகையிலும், ஏறத்தாழு 300 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பிரமாண்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 65 % பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதுமட்டுமில்லாமல், இந்தப் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியது. இதனிடையே, பேருந்து நிலையத்துக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் புதர்மண்டி காணப்படுகின்றன.

இந்த நிலையில் மீண்டும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் என வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு சார்பாக கோவை மாநகராட்சி ஆணையருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு சார்பில்‌ ஏற்கனவே நிறுத்திவைக்கப்பட்ட பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி நடத்த கோரிக்கை மனு தரப்பட்டது.

தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மீண்டும் பணி துவக்கி நடத்த வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்‌ தேவை என்பது மாவட்ட மக்களின்‌ நீண்ட கால எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில்‌ பொதுமக்கள்‌ எந்த தேவையாக இதந்தாலும்‌ எங்கே செல்ல வேண்டி இருந்தாலும்‌ நகரின்‌ மையப்பகுகளில்‌ உள்ள காந்திபுரம்‌, உக்கடம்‌, சிங்காநல்லூர்‌ மற்றும்‌ மேட்டுப்பாளையம்‌ ரோடு பஸ்‌ ஸ்டாண்டுகளுக்கு சென்று வர வேண்டி இருக்கறது.

கடும்‌ போக்குவரத்து நெரிசல்‌ , காலதாமதம்‌, ஒரே பகுதியில் அதிக மக்கள் கூடுவதால் ஏற்படும்‌ பிரச்சனைகள்‌ நாளுக்கு நாள்‌ அதிகமாகி வருகிறது.

வெள்ளலூர்‌ ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்‌ அமைவதன்‌ மூலமாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்‌. பைபாஸ்‌ ரோடு மற்றும்‌ புதிதாக பணி துவக்கப்பட்ட ரிங்‌ ரோடு மூலமாக வெள்ளலூர்‌ ஒருங்குணைந்த பேருந்து நிலையம்‌ மக்களின்‌ போக்குவரத்து
பயணத்தை மிக எளிதாக்கும்‌ என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கோவையின்‌ மிக முக்கிய அடையாளமாக பெயர்‌ சொல்லும்‌ திட்டமாக இருக்கக்கூடிய வெள்ளதூர்‌ ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டம்‌ முடக்கி வைத்து மூடுவிழா நடத்தப்பட்டது.

168 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ சுமார்‌ 40% பணிகள்‌ முடிந்த நிலையில்‌ பேருந்து நிலைய கட்டுமான பணி எந்த காரணமும்‌ இல்லாமல்‌ நிறுத்தி வைக்கப்பட்டது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நிதியில்லை என பல்வேறு தரப்பினர்‌ கருத்து தெரிவித்து வருகின்றனர்‌.
பொது மக்களின்‌ பங்களிப்புடன்‌ நடத்தக்கூடிய நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள பஸ்‌ ஸ்டாண்ட்‌ கட்டுமான பணிகளை நிறைவேற்றி பயன்பாட்டு குகொண்டு வரலாம்.

இல்லாவிட்டால்‌ பஸ்‌ ஸ்டாண்ட்‌ மீட்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில்‌ நிதி திரட்டி கட்டுமான பொருட்களை பெற்று தர தயாராக இருக்கிறோம்‌. அதன்‌ மூலமாக மீதமுள்ள பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம்‌.

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ்‌ ஸ்டாண்ட்‌ கோவையின்‌ உன்னத அடையாளமாக இருக்கும். பல்வேறு தரப்பினரும்‌ பொதுமக்களும்‌ வெள்ளலூர்‌ பஸ்‌ ஸ்டாண்ட்‌ பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆதரவு தெரிவித்துள்ளனர்‌.

இதை மாநகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ அரசு கருத்தில்‌ கொண்டு போதுமான நிதிகளை ஒதுக்க பணிகளை தொடர்ந்‌து நடத்த
முன்வர வேண்டும்‌. இல்லாவிட்டால்‌ நமக்கு நாமே இட்டம்‌, பொதுமக்கள்
பங்களிப்புடன்‌ கூடிய இதர திட்டங்கள்‌ மூலமாக பணிகளை தொடர்ந்து, நடத்த ஓப்புதல்‌ தர வேண்டும்‌. மக்கள்‌ கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம்‌ மனது வைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர முன்வர வேண்டும்‌ என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்‌ என குறிப்பிட்டுள்ளனர்.

Views: - 164

0

0